January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவுக்கு 10 கர்ப்பிணிகள் பலி; தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறு நிபுணர்கள் வலியுறுத்தல்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய தடுப்பூசி  ஏற்றிக் கொள்ள தகுதியுடைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திட்டமிட்டபடி ஒகஸ்ட் 14 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

எனினும் நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டத்தில் தாமதம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய நிறுவனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா, அதனை விரைவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த நடவடிக்கைக்கு பொறுப்பான அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா வலியுறுத்தினார்.