July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி!

பயங்கரவாத தடை சட்டத்திலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். மூன்று தசாப்தத்துக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். ஆகவே இதனை மாற்றியமைக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு அமையவே எவரேனும் ஒருவருக்கு குற்றவியல் தண்டனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கமாக நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆகவே விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்ட நபர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பு கிடைக்கப் பெற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை விடவும் அதிக காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இவர்கள் குறித்து கவனம் செலுத்தி யாரையும் பழிவாங்காது இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நாம் முயற்சிக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், வழக்கு தொடுக்கப்படவில்லை என்றால் அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு நாம் முழுமையாக இணக்கம் தெரிவிப்போம். இது ஜி.எஸ்.பி சலுகைக்காக செய்யும் நடவடிக்கை அல்ல. நீண்ட காலமாக இது குறித்து நாம் பேசி வருகின்றோம்.

அமைச்சரவை கூட்டத்திலும் இதனை பேசினோம், பயங்கரவாத தடை சட்டத்திலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். மூன்று தசாப்தத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். ஆகவே இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் மக்களையும் பாதுகாத்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.