January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தில் ரணிலுக்கு முன் வரிசையில் ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்க்கட்சி பக்கம் முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் இவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நாளை முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும், சபாநாயகர் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதன்பின்னர் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் அவர் அமர்ந்துகொள்வார்.