ஐக்கிய மக்கள் சக்தியின் ‘எதிர்க்கட்சியில் இருந்து ஓர் மூச்சு’ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மருத்துவ உபகரணங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் வழங்கி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 23 இலட்சத்தி 20 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவ உபகரணம் ஒன்று வழங்கப்பட்டது.
‘எதிர்க்கட்சியில் இருந்து ஓர் மூச்சு’ 16 ஆவது திட்டம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் சரவணபவனிடம் கையளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மருத்துவத்துறையைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், டி. சித்தார்தன், இரா. சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.