
இலங்கையில் ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி பரீட்சைக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
அதன்படி, தகுதி உடையவர்கள் தமது விண்ணப்பங்களை ஜூன் 18 முதல் ஒகஸ்ட் 13, வரை ஒன்லைனின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்திற்கான இணைய முகவரி https://applications.doenets.lk/exams