October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?; தீர்வினை கோருகிறது தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம்!

எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, எரிபொருளை கொண்டு செல்வதற்கான செலவும் அதிகரித்துள்ளதன் காரணமாக தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாட்டில் கடந்த 11 ஆம் திகதி முதல் ஒரு லீட்டர் டீசல் விலை ரூ .7 ஆக அதிகரித்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தின் போது ஒரு கிலோமீட்டருக்கு 7 முதல் 28 ரூபா வரை கூடுதல் செலவை தாங்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி 25 ஆம் திகதி அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​மார்ச் 12 ஆம் திகதிக்கு முன்னதாக போக்குவரத்து கட்டணம் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க கோரியதாக தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் கடுமையான சிக்கல்களை எதிர் கொண்டுள்ளதாகவும் இந்த வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் உறுப்பினர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் சங்கம் எச்சரிக்கிறது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் சுமார் 90% தனியார் டேங்கர் உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தனியார் டேங்கர் உரிமையாளர்கள் இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்களாயின் நாட்டில் எரிபொருள் விநியோக தடை காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.