மக்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளாது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவோ, நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லவோ அரசாங்கத்திற்கு முடியாவிட்டால், அதனை செய்யக் கூடியவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள் என்றும் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்திற்கு செல்லும் போது, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மக்களின் துன்பங்களை போக்குவதற்கு பதிலாக, மேலும் மேலும் துன்பத்துக்குள் மக்களை தள்ளும் செயற்பாட்டிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.