எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் இன்று முற்பகல் அந்தப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான இந்த நம்பிக்கைகயில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எம்.பிக்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போதும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பின்வரிசை எம்.பிக்கள் சிலர் பிரேரணையை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.