இலங்கையின் வர்த்தக ஏற்றுமதி 2021 மே மாதத்தில் 884.2 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது. இது 2020 மே மாதத்தில் பதிவான 586.7 மில்லியன் டொலர்களை விட 50.71% அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி முதல் மே வரையிலான வணிக ஏற்றுமதி 4,583.56 மில்லியன் டொலராக இருந்தது.இது 2020 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 3,456.32 மில்லியன் டொலர்களை விட 32.61% அதிகரித்துள்ளது.
“தொடரும் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், ஏற்றுமதியின் அளவு கொவிட் -19 க்கு முந்தைய நிலைமையை விட வேகமாக இடம்பெற்றிருப்பதை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நாட்டிற்கு புதிய உற்பத்திகளை ஈர்க்கும் அதே வேளையில், ஏற்றுமதி உற்பத்திகளை கையில் பெறுவதற்கு அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஏற்றுமதியாளர்களை செயல்பட வைப்பதற்கான அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு உதவுவது அதிகாரிகளின் பொறுப்பாகும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் சுரேஷ் டி மெல் குறிப்பிட்டார்.
2021 மே மாதத்தில், காய்கறிகள் மற்றும் பிற ஏற்றுமதி பயிர்களைத் தவிர அனைத்து தயாரிப்புகளும் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.