July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொது மக்களின் நடத்தை மிகவும் கவலைக்குரியது’; பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

????????????????????????????????????

இலங்கையில் இன்று (21) பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலைக்குரியது என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிகமானவர்கள் எந்தவித சுகாதார கட்டுப்பாடுகளையும் பின்பற்றாதும், சமூக இடைவெளியை பேணாதும் பொறுப்பின்றி நடந்து கொண்டமை அவதானிக்க முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.

நாட்டில் ஏற்கனவே பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸுக்கு மேலதிகமாக அதி தீவிரமாக பரவும் புதிய டெல்டா வைரஸ் வகை நாட்டில் இருப்பதை அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், நாடு ஒரு பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

புதிய சுற்று நிருபத்தின்படி, தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு 14 நாட்களின் பின்னர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் பி.சி.ஆர் பரிசோதனை அளவிற்கு அன்டிஜன் பரிசோதனை சரியான முடிவுகளை தருவதில்லை.

எனவே, எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையுமானால் அது எமது பரிசோதனையில் உள்ள பிழை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனை காரணமாக சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.