January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிப்பர் வாகன சாரதி, மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த டிப்பர் வாகன சாரதிக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாக்குவாதமொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெறும் போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.