February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை வருவாரா? – தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வருவது இன்னமும் உறுதியாகவில்லை என அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான விஜயத்தின் பின்னர் மைக் பொம்பியோ இலங்கைக்கு சில மணிநேர விஜயத்தை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்ததாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.

ஆனால் எம்.சி.சி சோபா உடன்படிக்கை குறித்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த விஜயம் இரத்துச்செய்யப்பட்டதாக குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.