January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சட்டத்தினால் கூறப்பட்ட அளவைவிட அதிகளவான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 90 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே 21 ஆம் திகதி நாட்டில் பயணத்தடை நடைமுறைக்கு வந்த நிலையில், ஒரு மாத காலத்தின் பின்னர் இன்று மதுபானசாலைகள் திறக்கப்பட்டன.

இதன்போது, 10 க்கு அதிகமான மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து, எடுத்துச்சென்ற ஐவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மூவரும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் ஒருவரும் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.