அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அவர், தனிப்பட்டகாரணங்களுக்காக கடந்த வாரம் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்காக அனுமதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தேசிய லொத்தர் சபையின் தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இவர் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.