இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறை வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதிகள் 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆடை ஏற்றுமதித்துறை 28.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
முதல் நான்கு மாதங்களில் புடவை ஏற்றுமதி 41.2 சதவீதத்தாலும், ஆடை ஏற்றுமதி 27.3 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.