கொதலாவல தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
கொதலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டலிகளின் கீழ், பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாம் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.