
ஏனைய கொவிட் வைரஸ் தொற்றுகளை விடவும் ‘டெல்டா’ மோசமானது என்பதனால், இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கொவிட் நான்காம் அலையொன்று உருவாக மக்களின் பாதுகாப்பற்ற செயற்பாடுகள் பிரதான காரணமாக அமைந்து விடலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாடு பாதுகாப்பான சூழலில் இல்லை. இதற்கு முன்னர் இருந்த நிலையை விடவும் மோசமான அச்சுறுத்தல் நிலையொன்றில் நாம் உள்ளோம் என்பதை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அனாவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் இறுதியாக அவர்கள் கொடுத்த விலை அதிகமாகும். லட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுக்க நேர்ந்தது. இன்றும் அதன் தாக்கம் இந்தியாவில் உள்ளது என்று வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நிலையொன்று இலங்கையில் ஏற்பட்டுவிடக் கூடாது. இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.