
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடற்பரப்பில் பெருமளவான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு படகொன்றை சுற்றுவளைத்து சோதனையிட்ட போது அதில் இருந்து 174 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 52 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அந்தப் படகில் இருந்த பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ள சந்தேக நபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.