இலங்கையில் நாளை (21) பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ள நிலையில், மேல் மாகாணத்தில் 700 அவசர சாலை தடைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சுமார் 8,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நாளைய தினம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை அவதானிக்க கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ட்ரோன் கமரா மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
அலுவலகங்களின் உள்ளேயும் வெளியேயும், பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் போதும் சுகாதார விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.