November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொற்று நோயியல் பிரிவின் புதிய தலைமை நிபுணராக சமித கினிகே நியமனம்!

இலங்கை தொற்று நோயியல் பிரிவின் புதிய தலைமை தொற்று நோயியல் நிபுணராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணராக செயற்பட்ட வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய நிபுணர் சமித கினிகே கொழும்பின் தொற்று நோயியல் பிரிவில் துணை  நிபுணராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.