
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல், இலங்கையின் 12 மாவட்டங்களில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.
மறு அறிவித்தல் வரையில் குறித்த பிரதேசங்களை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள், நாளை காலை முதல் அதில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.