January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறக்குமதி செய்யப்படும் செல்லப் பிராணிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை!

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதாக இதுவரை எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாவிட்டாலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் செல்லப் பிராணிகளை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் அண்மையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் எரந்திக குணவர்தன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது,

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவரிடமிருந்து தான் சிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று கூறினார்.