November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு தளர்வு; நடைமுறைக்கு வரும் சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டுதல்கள்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர்  பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த தொடர் அறிவுறுத்தல்கள் அடுத்த சில மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,

நாளை அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. எனவே இதன்போது மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அடுத்த சில மணி நேரத்தில் வெளியிடப்படும்.

குறிப்பாக ஒரு சிலர் ஒன்று சேர்ந்து தான் இந்த புதிய நடைமுறைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகவே, இந்த விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் போது சில நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.

எது எவ்வாறாயினும், இந்தப் புதிய நடைமுறைகளை நீண்ட காலத்துக்கு முன்னெடுப்பது தான் சுகாதார அமைச்சின் குறிக்கோளாக உள்ளது. இதன் மூலம் இலங்கையில் இருந்து கொரோனா வைரஸை முற்றாக இல்லாமல் செய்வது தான் எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே, சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவுள்ள வழிகாட்டுதல்களை அனைத்து மக்களும் நீண்டகாலம் பின்பற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.