May 25, 2025 4:20:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்”: இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிவரலாம்  என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களின் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொரோனா தாக்கம் அதிகளவில் இருக்கும் மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு எதிர்வரும் நாட்களில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

ஒரு மாத காலமாக நாட்டை முடக்கி கொரோனா தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டுப்படுத்திய தொற்றினை மீண்டும் அதிகரிக்காத வகையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், இதற்கு மக்களின் ஆதரவு  அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.