கொவிட் -19 நெருக்கடி மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாகவே நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடிவு செய்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் நாடாளுமன்றத்திற்கு வர திட்டமிட்டிருக்கவில்லை.ஆனால் நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமை காரணமாக அதற்காக உழைக்கவேண்டும் என்ற அழுத்தம் பல இடங்களிலிருந்தும் எனக்கு வந்தது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொவிட் காரணமாக நிறைய மரணங்கள் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த விடயங்களைப் பற்றி நான் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.அதுவே நான் நாடாளுமன்றத்துக்கு வர முக்கிய காரணம்.
அரசியல் ரீதியாக ஒரு அரசாங்கம் அதன் புகழை இவ்வளவு விரைவாக இழந்ததை நான் கண்டதில்லை. அதேபோல், எதிர்க்கட்சியால் ஒரு மாற்றீட்டை வழங்க முடியவில்லை. இது மிக மோசமான ஒரு நிலைமை என்றும் அவர் தெரிவித்தார்.