இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 17,026 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 408 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 298 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு, 2,166 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும் இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் 13 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த 13 பேர் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்கள் இலங்கை பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.