January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலுக்கு தடையுத்தரவு கோரி மனு

இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலுக்கு தடை உத்தரவு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர்கள் சிலரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் தெரிவுக் குழுத் தலைவர் டாக்டர் மைத்திரி சந்திரரத்ன மற்றும் 10 உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் பிரியன்த அதபத்து மற்றும் தற்போதுள்ள அலுவலக பொறுப்பாளர் ஒருவரும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலுக்கு தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.