January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்!

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.

இவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

தற்போது ரஞ்சன் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.