
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு பட்டியலின் பிரகாரம் யாழ்.மாவட்டம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தினை இழந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற ஆசனங்கள் ஆறாக குறைவடைந்துள்ளது.
இதனிடையே கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கு 9 பாராளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
எனினும் இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலின் படி 7 ஆசனங்களாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.