February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் கம்மன்பில மீதான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம்

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிராக வாக்களிக்கவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு துறைசார் அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவர் மற்றும் அமைச்சர் என்ற வகையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அமைச்சர் கம்மன்பில மீதான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுதந்திர கட்சி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.