
மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் டொல்பின் மீன் ஓன்றும் இன்று கரையொதுங்கியுள்ளன.
கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தைத் தொடர்ந்து கடல் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்க ஆரம்பித்தன.
இந்த நிலையில் மட்டக்களப்பு கடல்பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமைகள், டொல்பின் மீன் கரையொதிங்கியுள்ளமை தொடர்பாக கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.