
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 42 சந்தேக நபர்கள் மீது ஜூலை மூன்றாம் வாரத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே 32 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
மாவனெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம், லெக்டோஸ் தோட்ட பகுதியில் வெடிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டமை உள்ளிட்ட 8 வழக்குகளுடன் தொடர்புடைய 32 பேர் மீது இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து அரசாங்கத்தை குறை கூற மக்களுக்கு எந்த காரணமும் இல்லை எனவும் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.