கோழி உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதனால் கோழி இறைச்சியை அதன் நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாது என்று கோழி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்காச் சோளம் இறக்குமதியை தடை செய்தல், பெரிய அளவிலான இறக்குமதியாளர்களின் கோதுமை விதை இறக்குமதியை கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் காரணமாக விலங்குகளின் தீவன விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மக்காச் சோளத்தின் விலை 55 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோழி உற்பத்தியில் 70 சதவீத செலவீனம் விலங்கு தீவனத்திற்காக செலவிடப்படுவதாகவும் கோழி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.