ஊர்காவற்துறை, கரம்பன் கடற்கரை பகுதியில் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (17) படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது நான்கு பொதிகளில் சுமார் 130 கிலோ 760 கிராம் கேரள கஞ்சாவுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 39 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 31 வயதுகளை உடைய பேசாலை மற்றும் ஊர்காவற்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கேரள கஞ்சா மற்றும் படகுடன் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.