
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.