அமெரிக்காவுடன் “பேச்சுவார்த்தை மற்றும் மோதல்” ஆகிய இரண்டிற்கும் தனது நாடு தயாராக வேண்டும் என்றும், “குறிப்பாக மோதலுக்கு முழுமையாக தயாராக வேண்டும்” என்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆட்சிக்கு வந்ததன் பின் அவரின் நிர்வாகம் குறித்து ஜனாதிபதி கிம் நேரடியாக கருத்து தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வடகொரியாவை அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்த போதும் கிம் ஜாங்-உன் பலமுறை மறுத்துவிட்டார்.
கிழக்கு ஆசிய அரசின் அணுசக்தி சோதனைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இராஜதந்திர தகவல் தொடர்புகளை நிறுவுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் புதிய முயற்சிகளை வட கொரியா முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.