இலங்கை முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஜுன் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
21 ஆம் திகதியுடன் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தினாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.