
பயண கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதையடுத்து மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் சுமார் 500 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், அரசாங்கத்திற்கு சுமார் 1,500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையவழியில் மதுபான விற்பனையை மேற்கொள்ள நிதி அமைச்சு அனுமதி வழங்கியிருந்த நிலையில், மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதனையடுத்து இணைய வழியில் மதுபானத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.