
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜுன் 16 ஆம் திகதி இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினத்தில் 2,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள தொற்றாளர்களில் 195,434 பேர் குணமடைந்துள்ளதுடன், 35,256 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.