இலங்கையின் சுகாதார அமைச்சின் குழுக்களிடையே நிலவும் பிரிவினை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாகும் என்று பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் பிரிவுகளுக்கு இடையே தொடர்புகள் குறைவாகக் காணப்படுவதாகவும், ஒன்றிணைந்து பணியாற்றுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் முன்னேற்றத்துக்கு இவ்வாறான பிரிவினைகள் தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனிப்பட்ட பிரிவினைகளைத் தவிர்த்து, நாட்டு நலனுக்காக செயற்பட வேண்டும் என்று பேராசிரியர் அர்ஜுன கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம் போன்றவற்றுக்கு இடையே முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.