மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்று உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 30 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கும் நிகழ்வு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் கிடைக்க பெற்ற குறித்த பணம் வெளிவிவகார அமைச்சரினால் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பேசிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, உயிரிழப்பை ஈடுசெய்ய முடியாவிட்டாலும், இழப்பீடு வழங்குவதன் நோக்கம் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகும் என தெரிவித்தார்.