முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்படும் குருந்தாவசோக விகாரையின் பொது மண்டபத்துக்கும், தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறான நிகழ்வை நடத்தியமை தொடர்பில் வடக்கில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.