
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மகிந்த ஜயசிங்க இவ்வாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
227 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தால் அரசியலமைப்பு மீறப்படுவதாக தீர்ப்பளிக்கும்படி குறித்த மனுவில் குறிப்பிட்பட்டுள்ளது.
நாடு பல்வேறு அனர்த்தங்களைச் சந்தித்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 227 சொகுசு வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்ய முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர், அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை வங்கி, சுங்க பணிப்பாளர், ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 31 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.