கொழும்பின் மலே வீதியில் உள்ள 200 வருடங்கள் பழமையான டீ சொய்சா கட்டடம் நேற்று இரவு சரிந்து விழுந்துள்ளது.
கொழும்பு டீ சொய்சா கட்டடம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்பட்டது.
குறித்த கட்டடம் 200 ஆண்டுகள் வரை பழமையானது என்றும் சில வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் உரிமையாளர் இதற்கு முன்னர் கட்டடத்தை இடிக்க அனுமதி கோரியிருந்த போதும், தொல்பொருள் திணைக்களம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் சரிந்து விழுந்ததில் எவ்வித உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.