July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமைச்சர் கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்’: திலும் அமுனுகம

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர் கம்மன்பில பொறுப்பேற்ற வேண்டுமென்று கூறி, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.

எரிபொருள் சர்ச்சையை எதிர்க்கட்சி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பிரபல்யம் இல்லாத தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அமைச்சர் ஒருவரை சிக்கலில் மாட்டிவிடுவது பொருத்தமில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கான பொறுப்பை ஆளும் கட்சியின் அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளும்கட்சிக்கு பாராளுமன்றத்தில் 150 க்கு அதிகமான உறுப்பினர்கள் இருக்கும் போது, 22 பேர் கையொப்பமிட்டு, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது வேடிக்கையாகும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.