இலங்கையில் இணையவழியில் மதுபானம் விற்பனை செய்யும் யோசனையை தேசிய கொவிட் தடுப்புச் செயலணி நிராகரித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இணையம் மூலம் மதுபானங்களை விற்பனை செய்வதற்காக அனுமதியை வழங்குவதற்கான யோசனையை கலால் வரி திணைக்களம் நிதி அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தது.
இதற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கிய போதும், அதற்கு தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் அனுமதி அவசிமாகும் என்று நீதி அமைச்சு அறிவித்திருந்தது.
நிதி அமைச்சு குறித்த அனுமதியை வழங்கியதை தொடர்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்புகளை வெளியிட்டதுடன், அவ்வாறு அனுமதி வழங்குவது கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை கூடிய கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் அது தொடர்பில் ஆராய்ப்பட்ட போது, அந்த யோசனைக்கு அனுமதி வழங்காது இருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.