
ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ள விடயங்களின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு இலங்கை தயாராகிறது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றம் கவலை வெளியிட்டிருந்தது.
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை 27 சர்வதேச உடன்பாட்டு விதிகளை அமுல்படுத்த தவறும் நிலையில், ஜீஎஸ்பி வரிச் சலுகையை நீக்குவது குறித்து ஆராய்வதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைக்கத் தயாராக இருப்பதாகவும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.