யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ள வடிகாலிருந்து வெடிக்காத நிலையில் எறிகணை (செல்) ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யாழ். மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை மேற்கொள்ளும்போது எறிகணையை கண்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த யாழ்ப்பாணம் பொலிஸார் எறிகணையை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற இதே பிரதான வெள்ள வடிகாலில் துப்பரவுப் பணியின் போது கொடிய விஷ பாம்புகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.