
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை மீண்டும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது, ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட காரணத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் வெளியிடும் கருத்துகளை அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதக் கூடாது என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை பஸில் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு நபராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, அவர் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.