November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண அதிகாரங்களை கையகப்படுத்தும் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட கூட்டமைப்பு முடிவு

இலங்கையில் மாகாண அரசுக்கு உட்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசு கையேற்கும் அமைச்சரவை தீர்மானத்தை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்த போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை,மேற்படி அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மாகாணங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்தெடுக்கும் அரசின் இரகசிய நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவாக வெளிக்காட்டுகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கிலுள்ள நிறுவனங்களை கையகப்படுத்தி இந்த மாகாண சபைகளை அதிகாரமற்ற அமைப்புகளாக மாற்றுவதுடன்,மாகாண சபைகளையும் செயலிழக்க செய்யும் நோக்கம் அரசுக்கு இருக்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.